Sunday, 17 May 2015

நாதமுனிகள்

வைணவம் வளர்த்த தமிழ் மாமுனி

9 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. காட்டுமன்னார்கோயில் வீரநாராயணப் பெருமாள் ஆலயம். வெளியூர்களிலிருந்து வந்திருந்த அடியவர்கள், பாசுரங்கள் சிலவற்றைப் பாடி, பெருமாளைத் தொழுதுகொண்டிருந்தனர்.
“ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே, நீராய் அலைந்து,     
கரைய உருக்குகின்ற நெடுமாலே…………”
என்று தொடங்கிய அவர்கள், இறுதியில்
“……….குருகூர்ச் சடகோபன், குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்……” என்று முடித்தனர்.



பாசுரங்களைக் கேட்டான், அர்ச்சகர் ஈஸ்வரபட்டரின் மைந்தன். அவற்றின் அழகிலும், இனிமையிலும் அவன் உள்ளம் உருகியது. கண்ணீர் மல்கியது. பாசுரங்கள் சிலவற்றை மட்டுமே கேட்ட அவனுக்கு, அனைத்தையும் கேட்கும் பேரவா எழுந்தது.

தாரா ஷிகோ


(Dara Shikoh)
உபநிஷதங்களை உயிர்ப்பித்த முகலாய இளவரசன்


‘வேதங்களின் சாரமே உபநிஷதங்கள். எல்லாம் வல்ல பரம்பொருளின் அருள் பெற்ற இப்புனித உபநிஷதங்களைக் கற்று உணர்பவன், அழிவற்றவன் ஆகிறான். தளைகளிலிருந்து விடுபடுகிறான். சுதந்திர ஜீவனாகிறான்.’

இவ்வாறு, ஹிந்துக்களின் பழம்பெரும் நூலான உபநிஷதங்களின் புகழ்பாடியவன் முகலாய ராஜகுமாரன், தாரா ஷிகோ. பண்டைய பாரதத்தின் பெருமையை உலகறியச் செய்து, மத நல்லிணக்கத்தை வளர்த்த இஸ்லாமியன். இதற்காக இன்னுயிரையே ஈந்தவன்.  




மாமன்னன் ஷாஜஹான், காதல் மனைவி மும்தாஜ் இன் மூத்த மகனாக, 1615 இல் பிறந்தான், தாரா. இனிய குணமும், நல்லொழுக்கமும் கொண்டிருந்த தாரா, சக்ரவர்த்தியாக நாடாள்வதை எதிர்பார்த்திருந்தனர் மக்கள்.